Latest Tamil Kids News UK பொது அறிவு – உளச்சார்பு
பிரித்தானியாவில் 300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம் தோட்டம் ஒன்று வெப்பம் மற்றும் அனல்காற்ற்றின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஆளில்லா வானூர்தி மூலம் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் குறித்த மறைந்த தோட்டத்தைக் கண்டுபிடிக்கமுடிந்தது. டெர்பிஷயர் வட்டாரத்திலுள்ள சாட்ஸ்வொர்த் எஸ்டேட் (Chatsworth Estate) எனும் இடத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தோட்டம் காணப்பட்டுள்ளது.

ஐரோப்பியப் பாணியில் வடிவமைக்கப்பட்ட அந்தத் தோட்டம் 1699-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த தோட்டம் டியூக் ஒப் டெவன்ஷயர் (Duke of Devonshire) என்ற உயரிய பட்டம் பெற்றவருக்குச் சொந்தமாக காணப்பட்டதென தெரியவந்துள்ளது.
காலப்போக்கில் அங்கு அடர்ந்துவளர்ந்த புல் தோட்டம் மறைந்து போனதாக தெரிவிக்கப்படும் நிலையில், அக்காலத்தில் இருந்த தோட்டத்தின் வடிவமைப்பைக் குறிக்கும் முக்கியக் கோடுகள் அந்த இடத்தில் மீண்டும் தென்பட்டன.இந்நிலையில் அது கடந்த காலத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை அந்த தோட்டம் அளித்ததாகத் தோட்டத்தின் மேற்பார்வையாளர் ஸ்டீவ் போர்டர் குறிப்பிட்டுள்ளார்
kidhours – Latest Tamil Kids News UK
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.