Latest Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
5 வயதான சிறுமியொருவர் புத்தகம் எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் எழுதிய புத்தகம் தற்போது வரை 1,000 பிரிதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
பிரித்தானிய நாட்டின் வெய்மவுத் பகுதியைச் சேர்ந்த 5-வது சிறுமி பெல்லா ஜே டார்க். இவர் தனது 5 வயதில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
![5 வயதில் சிறுமி கின்னஸ் சாதனை Latest Tamil Kids News Today # World Best Tamil Top News Today 1 Latest Tamil Kids News Today](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/Untitled-design-2022-06-17T111615.981-1.jpg)
மிக இளைய வயதில் புத்தகத்தை எழுதி வெளியிட்ட பெண் என்ற சாதனையை பெல்லா ஜே டார்க் (5 வயது 211 நாட்கள்) படைத்துள்ளார்.
அவர் “தி லாஸ்ட் கேட்” என்ற தலைப்பில் பூனையை பற்றிய கதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகம் கடந்த ஜனவரி மாதம் 31-ம் திகதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரை இந்த புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு டோரதி ஸ்ட்ரெய்ட் என்பவரால் தனது ஆறு வயதில் எழுதப்பட்ட புத்தகம் தான் மிக இளைய வயதில் எழுதப்பட்ட புத்தகத்துக்கான கின்னஸ் சாதனை படைத்து இருந்தது.
இந்த புத்தகம் 1964 வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை பெல்லா ஜே டார்க் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
kidhours – Latest Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.