Latest Tamil Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
![அதிரடி காட்டிய புதிய ஜனாதிபதி Latest Tamil Kids News Sri Lanka # World Best Tamil 1 Latest Tamil Kids News Sri Lanka](https://www.kidhours.com/wp-content/uploads/2022/07/Untitled-design-2022-07-20T152630.958.jpg)
கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார். இலங்கை அரசியல் வரலாற்றில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, பிரதமராக நியமிக்கப்பட்டு பதில் ஜனாதிபதியாக பதவியேற்று தற்போது இடைக்கால ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Latest Tamil Kids News Sri Lanka , #ranil #lknews
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.