Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வடகொரியாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில் , சீனா மற்றும் ரஷியா இந்த நடவடிக்கையில் ஆர்வம் காட்டவில்லை.
ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் இது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதிநிதிகள், வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க பிரிட்டன் சம்மதம் தெரிவித்துள்ள அதேவேளை அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஓர் அணியில் உள்ளன.
இந்நிலையில் ரஷிய துணை தூதர் அன்னா எவ்ஸ்டிக்னீவா கூறுகையில், “புதிய கூடுதல் தடைகள் வட கொரிய குடிமக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சமூக பொருளாதார மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளால் அச்சுறுத்தும்” என கூறினார்.
அதேசமயம் சீன தூதர் கூறுகையில், “நிலைமையை உறுதிப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கவும், உரையாடலை மீண்டும் தொடங்கவும் அமெரிக்கா கடினமாக உழைக்க வேண்டும்” என கூறினார்.மேலும் பல கவுன்சில் உறுப்பினர்கள் வட கொரியாவிடம் ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில், இந்த நேரத்தில் பல தாக்குதல்களை உலகம் தாங்கிக் கொள்ள முடியாது, என்று கானா தூதர் ஹரோல்ட் அட்லாய் அக்யெமன் கூறினார்.
kidhours – Latest Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.