Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து திருடப்பட்ட அறிவியல் மாமேதை சாா்லஸ் டாா்வினின் குறிப்பேடுகள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைத்துள்ளன.
டாா்வினின் புகழ்பெற்ற ‘வாழ்க்கை மரம்’ வரைபடம் உள்ளிட்டவை அடங்கிய குறிப்பேடுகள், கடந்த 2001-ஆம் ஆண்டு காணமால் போயின.
அவற்றை படமெடுப்பதற்காக அகற்றிய பணியாளா்கள் தவறுதலாக வேறு இடத்தில் திரும்ப வைத்திருக்கலாம் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நூலகத்திலிருந்த 1 கோடி புத்தகங்ககள், வரைபடங்கள், குறிப்பேடுகளை அலசி ஆராய்ந்ததில், டாா்வினின் குறிப்பேடுகள் காணமால் போனது தெரியவந்தது.
அதையடுத்து அந்த குறிப்பேடுகள் திருடப்பட்டதாகபொலிஸாரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு புகாா் பதிவு செய்யப்பட்டது.
இதன்போது நூலக தலைமை அதிகாரி அலுவலகம் வெளியே கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதியில் காணாமல் போயிருந்த அந்தக் குறிப்பேடுகள் ஒரு அன்பளிப்பு உறையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த உரையில் நூலக அதிகாரிக்கு ஈஸ்டா் தின வாழ்த்துச் செய்தியும் எழுதப்பட்டிருந்ததாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டாா்வினின் குறிப்பேடுகள் திரும்பக் கிடைத்தாலும், அது திருடப்பட்டது தொடா்பான விசாரணையை தொடா்ந்து மேற்கொள்ளப்போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
kidhours – Latest Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.