Missing Flights சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் சிறிய ரக விமானமொன்று பயணிகளுடன் காணாமல் போயுள்ளது. ஒன்றாரியோவின் வடக்கு பகுதியில் இந்த சிறிய ரக விமானம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் மொத்தமாக இரண்டு பேர் பயணித்துள்ளனர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Cessna 208 Caravan என்னும் சிறிய ரக விமானம் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![பயணிகளுடன் காணாமல் போன விமானம் Missing Flights 1 Missing Flights சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/03/png_20230303_121215_0000.jpg)
நாகீன்னா என்னும் இடத்திலிருந்து ஹோப் துறைமுக பகுதிக்கு பயணம் செய்த விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் வரையில் குறித்த இடத்தை அடையாத காரணத்தினால் விமானத்தின் உரிமையாளர்கள், மீட்பு பணியாளர்களுக்கு விமானம் காணாமல் போன விடயத்தை தெரிவித்துள்ளனர்.
விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ஹெலிகொப்டர்கள், விமானங்கள் ஊடாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Kidhours – Missing Flights
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.