Latest Tamil Kids News King Charles சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தமது தாயாரான மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் (Queen Elizabeth II ) ஏழு தசாப்தங்களுக்கும்
மேலாக ‘விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்’ சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் (King Charles III) தெரிவித்துள்ளார்.
இரண்டாவது எலிசபெத் (Queen Elizabeth II ) காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ் (King Charles III) , முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
என் அன்புக்குரிய தாய் – எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார்.
மேலும் எந்தவொரு குடும்பமும் தங்கள் தாய்க்கு செலுத்த வேண்டிய இதயப்பூர்வமான கடனை நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்’ என சார்ல்ஸ் (King Charles III) தெரிவித்துள்ளார்.
‘மகாராணி அசைக்க முடியாத பக்தியுடன் செயற்பட்டமையை போன்று நானும் இப்போது கடவுள் எனக்குக் கொடுக்கும் எஞ்சிய
காலம் முழுவதும் நமது தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன் என்றும் சார்ல்ஸ் (King Charles III) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு விசுவாசம் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ய முயற்சிப்பேன்.’ என்றும் மன்னர் (King Charles III) தமது உரையில் தெரிவித்துள்ளார்.
kidhours – Latest Tamil Kids News King Charles
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.