Global Temperature Risk, உலக காலநிலை செய்திகள்
கடந்த 143 நாடுகளில் உஷ்ணம் அதிகமான மாதமாக கடந்த ஜூலை மாதம் பதிவாகியுள்ளது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள நாசா அதுதொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
1880 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த மாதம் தான் மிகவும் அதிகமான வெப்பநிலை உலகம் முழுவதும் பதிவாகியிருக்கிறது. இது உலக நாடுகளுக்கு ஓர் அலெர்ட் என்றே எடுத்துக் கொள்ளலாம். கடந்த சில வாரங்களாக உலகம் அதிக வெப்பநிலை, காட்டுத் தீயால் பாதிப்பு, வெள்ளம் போன்றவற்றை சந்தித்து வருகிறது. இது கால நிலை சீராக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
ஜூலை 2023-இல் உலகம் 0.43 டிகிரி பாரன்ஹீட் அதாவது 0.24 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலையாக பதிவாகி இருந்தது. பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டு வருகின்றன. அதேநேரம் அறிவியல் நமக்கு தெளிவான பாதையை காட்டுகிறது. சமூகத்தையும், உலகத்தையும் பாதுகாப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும்.
தென் அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் அண்டார்டிக் தீபகற்பத்தின் சில பகுதிகள் சராசரி வெப்பநிலையை விட 7.2 F (4 C) வரை வெப்பநிலை அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த கோடையில் நிலவிய கடுமையான வெப்பம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான வெப்பம் சார்ந்த புதிய நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பருவ நிலை மாற்றத்தால் எல் நினோ போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் எல் நினோ பெரிய அளவில் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல் நினோவின் தாக்கத்தை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Global Temperature Risk
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.