Latest Tamil Kids News German சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜேர்மனி சமீபத்தில் திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்வதற்காக புலம்பெயர்தல் திட்டங்களை எளிமையாக்க இருப்பதாக அறிவித்தது.
புதிய புலம்பெயர்தல் விதியின்படி, ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை வழங்குதல் மற்றும் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வோருக்கு 3 முதல் 5 ஆண்டுகளிலேயே சிறப்பு குடியுரிமை நிலை வழங்குதல் ஆகிய சலுகைகளை முன்வைத்து திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர திட்டமிட்டு வருகிறது.
ஜேர்மன் அரசு கல்வியாளர்கள் மற்றும் உடல் ரீதியாக உழைக்கும் பணியாளர்கள் என இருதரப்பினரையும் கவர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck கூறும்போது, உலகம் முழுவதிலுமுள்ள நாங்கள் மகளை வரவேற்கிறோம் என்கிறார்.
அதாவது, கைவினைக்கலைஞர்கள், மின்பொறியாளர்கள், தகவல் தொடர்புத்துறை நிபுணர்கள், மருத்துவ சேவைப்பணி செய்வோர், செவிலியர்கள், உணவகத்துறை மற்றும் விருந்தோம்பல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக வரவேற்கப்படுகிறார்கள்.
இதுபோக, அதிக தேவையிலிருக்கும் பணிகள் மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோர் ஆவர்.
அதுமட்டுமின்றி, உலோகவியல் மற்றும் கட்டுமானப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவுவது குறிப்பிடத்தக்கது.
kidhours – Latest Tamil Kids News German
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.