Latest Tamil Kids News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது,
விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலியாக மிரட்டல் விடுத்த அந்த நபரை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போர் விமானங்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் பாதுகாப்பாக சிங்கப்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 209 பயணிகளுடன் சிங்கப்பூர் வந்தது.
நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
தொடர்ந்து ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்ட அந்த நபர், ஒருவரை தாக்கி உள்ளார். இதனையடுத்து அவரிடம் நடந்த சோதனையில் அவரிடம் எந்த வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது.
இது குறித்து சிங்கப்பூர் பொலிசுக்கு விமான நிலைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், பயணிகள் விமானத்தை பாதுகாப்புடன் அழைத்து வந்தன.
அந்த விமானம் திட்டமிட்டபடி சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு, தயாராக இருந்த பொலிசாரிடம் மிரட்டல் விடுத்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மீது ஊழியர்கள மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நபர் போதை பொருட்கள் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட நபரின் தகவல்களை வெளியிட சிங்கப்பூர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
kidhours – Latest Tamil Kids News Flight
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.