Different Spaceships சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் மனித முழுமையாக அறிந்திராத அதிசய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும் அதை ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து என்னவென்று தெரிந்து கொள்ள மனிதன் முயற்சிப்பதும் காலம் காலமாகவே நடந்து கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் ஏலியன் என்ற கான்செப்ட்.
இந்த புவியில் அல்லாத வேற்றுக்கிரக வாசிகள் அனைவருமே ஏலியன் பெயரால்தான் அழைக்கப்படுகின்றனர். நாம் வசிக்கும் பூமி தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பது பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
இந்த ஏலியன்கள் பூமிக்கு ஏதேனும் விண்கலங்கள் மூலமாகத் தான் பறந்து வர முடியும் என்ற அனுமானம் உள்ளது. அவ்வாறு வான்பகுதியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (Unidentified Flying Objects, UFOs) அவ்வப்போது
தென்படுவதாகக் கூறி பல காலமாக ஆராய்ச்சி செய்யப்படுகிறது. பெரும்பாலும் வேற்று கிரகங்களில் இருந்து வந்த பறக்கும் தட்டுகளைக் குறிக்கவே இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி சில UFOக்கள் பசிபிக் கடல் பகுதியில் தென்பட்டதாக விமானிகள் பலர் தெரிவித்துள்ளனர். வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFO குறித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருபவர் பென் ஹான்சன்.
முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஏஜென்ட்டான இவர் பல விமானிகளை பணிக்கு எடுத்து UFOக்களை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்கிறார். இவரின் விமானிகள் கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் செப்டெம்பர் 23ஆம் தேதி அன்று பசிபிக் கடல் பகுதியில் UFO விமானங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மார்க் ஹல்சே என்ற விமான ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று ஏழு UFOக்கள் சுமார் 5,000இல் இருந்து 10,000 அடி உயரத்தில் பறந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இதன் இயக்கங்களை பதிவு செய்து வைத்துள்ள ஆராய்ச்சியாளர் பென் ஹான்சன் உளவுத்துறைக்கு தன்னிடம் கிடைத்த தகவல்களை பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சியானது அமெரிக்காவில் நீண்ட காலமாகவே ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது தொழில்நுட்ப அசுர வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இந்த ஆய்வில் ஏதேனும் முக்கிய நகர்வுகள் ஏற்படுமா என ஏலியன் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Kidhours – Different Spaceships
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.