Thursday, January 23, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புவைரத்தின் வியக்கவைக்கும் பிண்ணனி Latest Tamil Kids News

வைரத்தின் வியக்கவைக்கும் பிண்ணனி Latest Tamil Kids News

- Advertisement -

Latest Tamil Kids News Diamond சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நமது பூமி தோன்றி கிட்டத்தட்ட 440 கோடி வருடங்கள் இருக்கும். அப்படியானால் இந்த உலகத்தில் உள்ள வைரம் தோன்றி 100 முதல் 330 கோடி வருடங்கள் வரை ஆகியிருக்க வேண்டும். பூமி உருவானதில் இருந்து வைரம் தோன்றியிருக்க வேண்டும் என்றே பலரும் கூறுகின்றனர். பண்டைய காலங்களில் வைரம் என்பது தேவதைகளின் கண்ணீர் என்றும் இறந்து போகும் நட்சத்திரம் என்றும் நினைத்தனர்.1400 காலகட்டம் வரை இந்தியா தான் வைரத்தை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகித்தது.

1700 பிரேசில் முதல் இடத்தை பிடித்தது. பின்னர் 1800 தென்னாப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்தது. அந்த நாட்டில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தின் பெயர் யுரேகா வைரம். இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதன் தேவை அதிகரிக்கிறது. இதற்காக விளம்பரங்கள் பல செய்ய தொடங்கினர். இந்தியாவில் வைரம் என்பது நான்காவது நூற்றாண்டிலிருந்து இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றது. அதற்கு முன்பே நாம் வைரம், வைடூரியம் போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான ஆதாரமாக சங்க இலக்கியங்கள் பல இருக்கின்றது.

- Advertisement -

ஆனால் 1867-ம் வருடம் தான் வைரத்தின் மற்றொரு அத்தியாயமாக அமைந்தது இதைத் தொடங்கி வைத்தது எராஸ்மஸ் ஜேக்கப் எனும் 15 வயது சிறுவன். இவர் ஆரஞ்ச் நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விளையாடுவதற்காக சில கற்களை நதியோரத்தில் இருந்து எடுத்துள்ளார். அதில் ஒன்று மட்டும் மிகவும் பிரகாசமாக ஜோலித்து கொண்டிருந்தது.அதையும் தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.

- Advertisement -
Latest Tamil Kids News Diamond
Latest Tamil Kids News Diamond

ஜேக்கப் கொண்டு சென்ற கற்களை வைத்து இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்தவர் இந்த ஜொலிக்கும் கல்லை பார்த்து ஆச்சர்யமடைந்தார்.இது சாதாரண கல்லாக இருக்காது என நினைத்துக்கொண்டு ஜேக்கப்பின் பெற்றோரிடம் சென்று அந்த ஒரு கல்லை மட்டும் எனக்கு தர முடியுமா? என கேட்டுள்ளார். அவர்களும் வெறும் கல் தானே எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். அந்தக் கல்லுக்கு பணம் தருவதாக கூறிய பின்னரும் எதுவும் வேண்டாம் கல்லை எடுத்துச் செல்லுங்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கல்லை வாங்கி சென்றவர் தான் ‘நீக்கர்’. இது பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள தபால் மூலமாக வில்லியம் என்ற ஆராய்ச்சியாளருக்கு அனுப்பிவைத்தார். வில்லியம் அவர்கள் அந்தக் கல்லை ஆய்வு செய்ததில் அது 21.24 கேரட் வைரம் என்பதை கண்டறிந்து இதுகுறித்த தகவலை நீக்கரிடம் கூறியதோடு எங்கிருந்து இந்த கல் கிடைத்தது என்றும் கேட்டுள்ளார்.

இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நீக்கர் மீண்டும் சிறுவனின் வீட்டிற்கு சென்று அந்தக் கல் எந்த இடத்தில் கிடைத்தது என்று கேட்கிறார்.அவர் அதற்கு ஆற்றின் கரையோரத்தில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளார். இதன்பிறகு அந்தப் பகுதியிலிருந்து வைரங்கள் கிடைக்கும் என பல தகவல்கள் பரவத்தொடங்கியது. சரியாக மூன்று வருடம் 1870-ம் ஆண்டு இதே தென்னாப்பிரிக்காவில் 17 வயதான ‘செசில் ரோட்ஸ்’ என்பவரும் வைரம் தேடுதலில் ஈடுபடுகிறார். ஏராளமான விவசாயிகள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது ‘டீ பீர்ஸ்’ சகோதரர்கள் இருவரின் நிலத்தில் வைரம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டு வர தங்கள் பணியை சரியாக செய்ய முடியாத சகோதரர்கள் இருவரும் அந்த நிலத்தை செசில் ரோட்ஸிடம் விற்று விடுகின்றனர். அதன்பிறகு செசில் ரோட்ஸ் தான் அந்த இடத்தில் டீ பீர்ஸ் எனும் சுரங்கப்பாதை அமைக்கிறார். அந்த இடத்தில் ஏராளமான வைரங்கள் கண்டெடுக்கப்பட்டது.

Latest Tamil Kids News Diamond
Latest Tamil Kids News Diamond

1880 முதல் 1890 வரை ஏராளமானோர் வைரத்தை தேடி அந்த இடத்திற்கு சென்றதால் ‘GREAT KIMBERLY DIAMOND RUSH’ என அழைத்தார்கள்.இதனால் பூமியில் மிகப்பெரிய குழி தோண்டப்பட்டது. இதனை இன்று வரை உலக நாடுகள் மிகவும் அதிசயமாக பார்க்கிறது. காரணம் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான குழி என்றால் அது இதுதான். 1890 களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மட்டும் 90 சதவீத வைரங்கள் எடுக்கப்பட்டது.

Latest Tamil Kids News Diamond
Latest Tamil Kids News Diamond

இரண்டாயிரம் வருடங்கள் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட வைரத்தின் அளவுகளை விட 10 முதல் 20 வருடங்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்து எடுக்கப்பட்ட வைரங்களின் அளவு அதிகம் என்று கூறலாம். இந்த வைரத்தை எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் அவர்களை ஒன்றிணைக்க ‘THE DIAMOND SYNDICATE’ எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கா அந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்ததால் அந்த அரசாங்கம் தான் இந்த அமைப்பை உருவாக்கியது. இது உருவாக முக்கிய காரணமாக அமைந்தது செசில் ரோட்ஸ் தான். இவர்தான் சகோதரர்களிடம் இருந்த நிலத்தை விலைக்கு வாங்கியதோடு விவசாயிகளின் நிலத்தையும் வாங்கினார்.

 

kidhours – Latest Tamil Kids News Diamond,Latest Tamil Kids News  kidhours,Latest Tamil Kids News siruvar seithigal

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.