Communication from Space சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் தனது மகனுடன் பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரரான சுல்தான் அல் நெயாடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார்.இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளது.
அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.செப்டம்பர் 1-ம் திகதி பூமிக்கு திரும்பும் அல் நெயாடியிடம், பூமியில் அவருக்குப் பிடித்த அம்சம் என்ன என்று அவரது மகன் கேட்கிறார். அதற்கு நீ தான் என பதில் அளிக்கிறார்.
“My name is Abdulla Sultan Al Niyadi” – Emirati Astronaut Sultan Al Niyadi’s son asks a question from Earth to his dad in ISS… adorable 💙 !
Thank you @HHShkMohd for fostering a space science culture in our kids … you brought the future to us today ! pic.twitter.com/7xRLEmHat4
— حسن سجواني 🇦🇪 Hassan Sajwani (@HSajwanization) August 17, 2023
மேலும் பூமியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போல் தான் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடன் இருக்கிறோம் என கூறினார்.”என் பெயர் அப்துல்லா சுல்தான் அல் நெயாடி” என விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடியின் மகன் பூமியிலிருந்து தனது அப்பாவிடம் கேள்வியைக் கேட்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
தந்தை-மகன் இருவருக்கும் இடையேயான பாச பரிமாற்றத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Kidhours Communication from Space
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.