Clash in Libya சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தெற்கு லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு சக்திவாய்ந்த ஆயுதப் பிரிவுகளுக்கு இடையே நேற்று முன்தினம் (14) ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லிபிய நாட்டின் அவசர சேவைகள் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் (14) திரிபோலியின் முக்கிய மிட்டிகா விமான நிலையத்தின் வழியாக லிபியாவின் 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா பயணிக்க முயன்றபோது, அவர் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சண்டை ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பு படைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், அனால் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
ஹம்சாவை நடுநிலைக் கட்சிக்கு மாற்ற ஐ.நா – தேசிய அரசாங்கத்துடன் உடன்படிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மோதல்கள் மெல்ல நிறுத்தப்பட்டன என்று அரச செய்தி நிறுவனமான லானா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 106 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் பொதுமக்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Kidhours – Clash in Libya
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.