Ginners Record of Dog பொது அறிவு செய்திகள்
பெப்பில்ஸ் என்ற பெயருடைய டாய் ஃபாக்ஸ் டெரியர் ( Toy Fox Terrier) இனத்தைச் சேர்ந்த நாய் உலகின் அதிக வயதில் உயிர் வாழும் நாய் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் பெப்பில்ஸ் கடந்த திங்கட் கிழமை, அக்டோபர் 3ம் தேதி தனது 22 வயதில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் கரோலினாவில் டெய்லர்ஸ் என்ற இடத்தில் அதனின் உரிமையாளர்களுடன் வசிக்கும் பெப்பில்ஸ், அதனின் உரிமையாளரின் முன்னிலையில் இறக்கையாக மரணம் அடைந்தாக கின்னஸ் உலக சாதனை குழுவிடமிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்பில்ஸ் 2000ம் ஆண்டு மார்ச் 28ம் நாள், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள லாங்க் தீவில் பெண் நாயாகப் பிறந்தது. அதன் பின்னர் பாபி மற்றும் ஜூலி கிரிகோரி என்றவர்களுக்கு வளர்ப்பு பிராணியாக இருந்து வந்தது.
23 வயதைத் தொடுவதற்கு வெறும் 5 நிமிடமே இருந்த நிலையில் பெப்பில்ஸ் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோபி கீத் என்ற 21 வயது நாய் தான் முன் உலகின் நீண்ட நாள் வாழும் வயதான நாய் என்று இருந்த நிலையில் பெப்பில்ஸ் உரிமையாளர்கள் பெப்பில்ஸ் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைத்தனர்.
ராக்கி என்ற அதே இனத்தைச் சேர்ந்த நாயுடன் இணைந்து வாழ்ந்து வந்த பெப்பில்ஸ் 32 குட்டிகளைப் பெற்றுள்ளது.
2017ம் ஆண்டு ராக்கி தனது 16 வயதில் இறந்த நிலையில் பெப்பில்ஸ்- க்கு தனிமை தெரியாமல் அதன் உரிமையாளர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்துக்கொண்டு வந்தனர்.
கின்னஸ் உலக சாதனை குழு வெளியிட்ட அறிக்கையில் பெப்பில்ஸ், அதனின் நாட்டு இசையின் மேல் உள்ள ஆர்வத்திற்காகவும், கோடைக்கால பிரியத்திற்காகவும் எப்போதும் நினைவில் மறையாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Kidhours – Ginners Record of Dog
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.