Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் ஒன்ராறியோவில் விமானம் ஒன்று இரண்டு பேருடன் மாயமான நிலையில், அதைத் தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.
கனேடிய இராணுவ செய்தித்தொடர்பாளரான Maj. Trevor Reid என்பவர் கூறும்போது, கடந்த வியாழனன்று மாலை 3.45 மணியளவில் ஒன்ராறியோவிலுள்ள டில்லியிலிருந்து Marathon என்ற இடம் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அது சென்று சேர வேண்டிய இடத்தைச் சென்றடையவில்லை என்று கூறும் Reid, ஆகவே, கனேடிய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை ஆகியவை அன்றே தேடுதல் நடவடிக்கையைத் துவங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
அன்று இரவு 8.00 மணிக்குத் துவங்கிய தேடுதல் வேட்டை நான்கு நாளாகியும் தொடர்கிறது.
ஆனால், அந்த விமானம் எதற்காக பயன்படுத்தப்பட்டது, அதில் பயணித்தது யார் என்பது போன்ற விடயங்களை Reid வெளியிடவில்லை.
kidhours – Latest Tamil Children News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.