Friday, November 29, 2024
Homeசிறுவர் செய்திகள்ஒருநாள் ஜனாதிபதியான 16 வயது சிறுமி Latest Tamil Children News

ஒருநாள் ஜனாதிபதியான 16 வயது சிறுமி Latest Tamil Children News

- Advertisement -

Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

16 வயது சிறுமி ஒருவர் ஒரு நாள் ஜனாதிபதியாக இருந்த வினோத சம்பவம் ஒன்று பின்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்தில், வெறும் 16 வயதே ஆகும் சிறுமியான நெல்லா சால்மினென் (Nella Salminen) கடந்த புதன்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் ஜனாதிபதியாக பதிவி வகித்துள்ளார்.

இது , உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள் ஒரு நாள் அரசியல் அல்லது வியாபாரத்தில் தலைமைப் பொறுப்பேற்கும் #GirlsTakeover பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பின்லாந்து நாட்டின் ஜனாதிபதி Sauli Niinistö-உடன் இணைந்து பணியாற்ற, தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனலால் (Plan International) நெல்லா சால்மினென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -
Latest Tamil Children News
Latest Tamil Children News

இது குறித்து கூறிய நெல்லா சால்மினென் (Nella Salminen) “இந்த நாள் முழுவதும் நான் நீண்ட காலமாக அனுபவித்த சிறந்த விஷயம் போல் உள்ளதாக தலைநகர் ஹெல்சின்கியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே இருந்தபடி கூறினார்.

- Advertisement -

இதேவேளை , பின்லாந்தின் பிரதம மந்திரி சன்னா மரின் (Sanna Marin) 2019-ஆம் ஆண்டு தனது 34 வயதில் ஆட்சியைப் பிடித்தபோது, ​​உலகின் மிக இளையவர் என்ற பெருமையைப் அவர் பெற்றார்.

Latest Tamil Children News
Latest Tamil Children News

மேலும் அக்டோபர் 11 அன்று ஐநாவின் பெண் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு பதின்ம வயதினர்கள் உகாண்டாவின் கல்வி அமைச்சர், சுவிஸ் கூட்டாட்சி ஆலோசகர் மற்றும் பல முக்கிய இந்தோனேசிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கடமைகளைப் பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Latest Tamil Children News

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.