Latest Tamil Children News Dinosaur
பீச் ஒன்றில் கடலை நோக்கி குட்டி டைனோசார்கள் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜுராசிக் பார்க் என்ற ஆங்கில திரைப்படத்தில் வரும் டைனோசார்களை நாம் பார்த்திருப்போம். மிரட்டும் வகையிலான பெரிய உருவம் கொண்ட அவை, பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளன.
காலப்போக்கில் அந்த உயிரினங்கள் அழிந்து விட்டன. எனினும், அவற்றின் படிமங்கள் கிடைத்து வருவது இந்த பூமியில் அவை வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன.
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
இந்நிலையில், குட்டி டைனோசார்கள் கடலை நோக்கி ஓட கூடிய அரிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பியூடென்கெபிடென் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதற்காக எனக்கு ஒரு சில வினாடிகள் எடுத்து கொள்ளப்பட்டது என தலைப்பிட்டு அவர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அதில், நீண்ட கழுத்துடன் சாரோபோட்ஸ் வகையை சேர்ந்த இளம் டைனோசார்கள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்கள் கடலை நோக்கி ஓடுகின்றன. 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பயனாளர்கள் பலர் குழம்பி போயுள்ளனர்.
அவர்களில் ஒருவர், அது நன்றாக உள்ளது. எனக்கும் சில வினாடிகள் எடுத்து கொண்டது என தெரிவித்து உள்ளார். எனினும், ஒரு சிலர் அதனை அடையாளம் கண்டுள்ளனர்.
kidhours – Latest Tamil Children News Dinosaur
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.