Latest Tamil Children News Deer
கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் ஆகிய மாகாணங்களில் மான்கள், கலை மான்கள், கடமான்கள் உள்ளிட்ட மான்களிடம் வித்தியாசமான நோய் ஒன்று பரவி வருவதாக அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு எவ்வித சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முன்னதாக இந்த தொற்று 1960ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதுடன், கொலராடோ, கன்சாஸ், மின்னிசோட்டா உள்ளிட்ட 26 மாகாணங்களில் இந்த தொற்றுநோயின் தாக்கம் இருந்தது.
கடந்த 1996ம் ஆண்டு கனடாவில் முதன்முதலாக சஸ்காட்செவனில் உள்ள மான் பண்ணையில் இந்த தொற்று பரவியது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அதன் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து விடுவதோடு, அதிக உமிழ்நீர் சுரப்பு, அசாதாரண நடத்தை, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிகுறிகளினால், இந்நோய் ஜாம்பி நோய் என குறிப்பிடப்படுகிறது. அதேசமயம் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட விலங்களின் இறைச்சியை உண்பதாலும், பாதுகாப்பற்ற முறையில் கையாள்வதாலும், மனிதர்களுக்கும் இந்த தொற்று பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் முடிந்தவரை இறைச்சியை பாதுகாப்பாக கையாள்வதுடன், ரப்பர் கையுறைகளை பயன்படுத்துமாறும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
kidhours – Latest Tamil Children News Deer
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.