Dangerous Plant சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஆபத்தான செடி ஒன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செடியினால் கண் பார்வையை இழக்க நேரிடலாம் எனவும் பொதுவாக மனிதரின் தோல் பகுதியில் உபாதைகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Myrtle spurge என்ற ஆமணக்கு குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த தாவரத்தை தொட்ட சிறுமி ஒருவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் இந்த தாவரத்தின் விஷமானது கண் பார்வையை இழக்கச் செய்யக்கூடிய அளவிற்கு ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாவரத்தை ஸ்பரிசம் செய்வதனால் உடல் சிவக்கின்றது எனவும் உடலில் எரிச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில், இந்த தாவரத்தை ஸ்பரிசம் செய்தவர்கள் இதுவரையில் பெரிய ஆபத்துகள் எதனையும் எதிர் நோக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த தாவரம் விஷம் நிறைந்தது எனவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாவர வகையானது மிக வேகமாக படர்ந்து வளரக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது எனவே இந்த தாவரம் தொடர்பில் மக்கள் போதிய அளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Kidhours – Dangerous Plant
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.