Latest Kids Tamil News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி பாபு இவர் ஒரு சிறிய பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன் கடைக்கு முட்டை வாங்க அருகில் உள்ள கோழி பண்ணைக்கு சென்று மொத்தமாக முட்டைகளை விலைக்கு வாங்கி வந்துள்ளார். கடைக்கு வந்ததும் அவர் வாங்கி வந்த முட்டைகளை பார்த்த போது ஒரு முட்டை மட்டும் வித்தியாசமாக பெருசாக இருந்துள்ளது இதை கண்டதும் அவர் ஆச்சரியமடைந்துள்ளார்.
அந்த முட்டை பார்ப்பதற்கு நிறை நிற மாங்காய் போலவே இருந்துள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த அவர் தன் கடையில் இருந்த ஒரு மாங்காவையும் அந்த முட்டையையும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ பலர் இதை பார்த்து வெள்ளை நிற மாங்காயா என குழம்பினர் ஆனால் இது முட்டை என தெரிந்ததும் ஆச்சியமடைந்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Latest Kids Tamil News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.