Friday, November 15, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகிற்கு முதல் முறையாக இரட்டை பயன்பாட்டு வாகனம் Latest Kids News

உலகிற்கு முதல் முறையாக இரட்டை பயன்பாட்டு வாகனம் Latest Kids News

- Advertisement -

Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜப்பானில் முதல் முறையாக ரயில் பாதைகளிலும், சாலைகளிலும் ஓடக்கூடிய இரட்டை பயன்பாட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், எலக்டரானிக் சாதனங்கள், நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றில் புதுமைகளை புகுத்துவதில் ஜப்பான் எப்போதும் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் அந்நாட்டில் தற்போது உலகின் முதல் இரட்டை பயன்பாட்டு வாகனம் DMV (Dual Mode Vehicle) உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை குறித்த வாகனம் சாலையிலும், ரெயில் பாதைகளிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் ஒரு மினிபஸ் போல தோற்றமளிக்கிறது. சாலையில் செல்லும் போது இந்த வாகனம் ரப்பர் டயர்களில் இயங்குகிறது.

- Advertisement -
Latest Kids News
Latest Kids News

இதனையடுத்து குறித்த வாகனத்தின் அடிப்பகுதியில் இருக்கும் எஃகு சக்கரங்கள் மூலம் ரெயில் பாதையில் இறங்கி, ஒரு ரயில் பெட்டியாகவும் செயல்படுகிறது. இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் 21 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. ரெயில் பாதைகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும் இயங்கும் என்று ஆசா கோஸ்ட் ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆசா கோஸ்ட் ரெயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “ஜப்பானில் குறைந்த மக்கள்தொகை கொண்ட கையோ பொன்ற சிறிய நகரங்களுக்கு இந்த வாகனங்கள் உதவக்கூடும்.

குறித்த இரட்டை பயன்பாட்டு வாகனம் (Dual Mode Vehicle) உள்ளூர் மக்களுக்கு பேருந்தாகவும், ரயிலாகவும் பயன்படும். அதே சமயம் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவும்” என்று தலைமை நிர்வாக அதிகாரி ஷிகேகி மியுரா கூறினார்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.