Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம், 123 பயணிகள் உட்பட 133 பேருடன், குன்மிங் நகரில் இருந்து குவாங்ஸோ நகருக்கு கடந்த 21 ஆம் தேதி புறப்பட்டது. இந்த விமானம் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள டெங்ஸியான் மலைப்பகுதியில் பறந்த போது, மலையில் மோதி விபத்துக்கு உள்ளானது. விமானம் காட்டுப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியதை அடுத்து, அங்கிருந்த மரங்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்த விமானத்தில் பயணித்த 123 பயணியர் உட்பட அனைவரும் உயிரிழந்து விட்டதாக சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தான் விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்பதால் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில் இன்று, விபத்துக்கு உள்ளான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தின் (விமான எண்: எம்யு 5735) கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சீன விமானத் துறை தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்தில் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக, சீன விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் லியு லுசாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
kidhours – Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.