G20 Countries Conference சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak)G20 உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா சென்றுள்ளார்.
இந்த நிலையில் G20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை(Rishi Sunak) சந்திக்க வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமரான பிறகு ரிஷி சுனக்(Rishi Sunak) மோடியை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
பாலிக்கு புறப்படுவதற்கு முன், ரிஷிசுனக் (Rishi Sunak)ஒரு அறிக்கையில் கூறியதாவது,
விளாடிமிர் புடினின்(Vladimir Putin) போர் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி உயிர்களை அழித்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் கொந்தளிப்பில் தள்ளப்பட்டுள்ளது. இந்த G20 உச்சி மாநாடு வழக்கம் போல் இருக்காது.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மரியாதைக்காக புடினின்(Vladimir Putin) ஆட்சியை அகற்ற G20 போன்ற இறையாண்மை மன்றங்களுக்கு அழைப்பு விடுப்போம்.
இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் உள்ள பொருளாதார சவால்களைத் தீர்க்கவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் செயல்படும் என்று கூறினார்.
Kidhours – G20 Countries Conference
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.