Latest Disaster News in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல்கள் தாக்குகின்றன. இவை அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை ‘மெகி’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் பிலிப்பைன்சின் பல மாகாணங்களை புரட்டி போட்டு விட்டது.
குறிப்பாக மத்திய மாகாணமான லெய்டே கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் லெய்டே மாகாணம் முழுவதும் வெள்ளகாடாகி உள்ளது.
மேலும் கனமழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள பேபே நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் பலர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியதானாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
193 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 28 மாயமாகி உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
kidhours – Latest Disaster News in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.