Latest Climate News Tamil உலக காலநிலை செய்திகள்
கனடாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் வலிமையான புயல்களில் ஒன்றான பியோனா, நோவா ஸ்கொடியாவின் கேப் பிரெட்டன் பகுதியில் கரையைக்கடக்க உள்ளது.
இதனையடுத்து கேப் பிரெட்டன் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியோனா புயல் பலத்த காற்றுடன் கான்சோவுக்கு அருகிலுள்ள நோவா ஸ்கோடியாவின் கிழக்கு எல்லையில் காலை 7 மணியளவில் கரையைக் கடக்கும் என கூறப்படுகிறது.
நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மணிக்கு 90 முதல் 120 கிலோமீற்றர் வேகத்தில் பரவலான காற்று வீசக்கூடும்.
கேப் பிரெட்டன் பகுதியின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பலத்த காற்று வீசியதுடன், சில வீடுகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது,
குடும்பங்கள் பல வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், பியோனா புயலானது கடல்சார்ந்த பகுதிகளில் உள்ள 500,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
kidhours – Latest Climate News Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.