Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்#lack of Oxygen#indiaOxyen

இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்#lack of Oxygen#indiaOxyen

- Advertisement -

இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது.கொரோனா இரண்டாம் அலையிடம் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, உயிர்பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளில்
ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரமாகியுள்ளதால் கொரோனா நோயாளிகள் அவதியில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதன்படி, 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை அனுப்ப சவுதி அரேபியா ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில், “இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைக்க அதானி குழுமம் மற்றும் M/s Linde நிறுவனத்துடன் இந்திய தூதரகம் கூட்டணி அமைத்துள்ளது.இதற்காக உதவியும், ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கிய சவுதி அரேபிய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3,49,691 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், 2,767 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,92,311 பேர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.