Tuesday, December 3, 2024
Homeபெற்றோர்ஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது!

ஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது!

- Advertisement -

 

- Advertisement -
child-vaccine-kidhours
child-vaccine-kidhours

ஒரு குழந்தையின் தடுப்பூசி பிறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பல தடுப்பூசிகள் உள்ளன. இது தாய் மற்றும் குழந்தை இருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், குழந்தை பிறந்த பின்னரும் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பல சவால்களுள் ஒன்று. ஆனால், இதற்கு பலரும் ஒருபோதும் தயாராக இருப்பதில்லை.

பல்வேறு சூழ்நிலையிலும் அல்லது எதிர்பாராத திருப்பங்களாலும் ஏற்படும் நன்மையே வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது. பெற்றோருக்குரிய ஒரு முக்கிய கடமை என்னவென்றால் அவரவர்களது குழந்தையின் தடுப்பூசி அட்டவணை முறையாக திட்டமிடுதல். தடுப்பூசியின் அவசியத்தை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் குழந்தைக்குத் தேவையான தடுப்பூசியை தவறாமல் இருப்பது ஒரு முக்கியமான பொறுப்பாகும். தற்போதைய சூழலில் இது மிகவும் முக்கியமான ஒன்று. கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து, தடுப்பூசிகளுக்காக மருத்துவமனைக்குச் செல்ல பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 80 மில்லியன் குழந்தைகள் டிப்தீரியா, அம்மை மற்றும் போலியோ உள்ளிட்ட நோய் தடுப்பூசியை தவறவிட்டுள்ளனர். இது போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு தடுப்பூசி தான் என்றும் பாதுகாப்பு. தவறவிட்ட தடுப்பூசியை நீங்கள் திரும்பப் பெறமுடியும். உங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை மீண்டும் தொடங்க ‘அன்லாக் 1.0’ உங்களுக்கு அனுமதி அளிக்கிறது. மீண்டும் தடுப்பூசி அட்டவணையை தொடங்குவது எவ்வாறு என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

- Advertisement -

தடுப்பூசிக் குறித்த புரிதல்

தடுப்பூசிகள், பொதுவான நோய்கள் மற்றும் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு எளிய வழியாகும். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது வளரும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு 7-8 வயது வரை முழுமையாக வளர்ச்சியடையவில்லை எனில், பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து அவர்களை காக்க, அவர்களின் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

mom-baby-child-kidhours.jpg
mom-baby-child-kidhours.jpg

தடுப்பூசி அட்டவணை தயாரித்தல்

நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, அந்த நோய் வராமல் தடுப்பதே என்றும் சிறந்தது. இதை தடுப்பூசிகள் சிறப்பாக செய்கின்றன. உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கும் எளிய வழி, குழந்தை பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையுடன் தடுப்பூசி அட்டவணையை உருவாக்குவது. ஒரு குழந்தையின் தடுப்பூசி பிறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பல தடுப்பூசிகள் உள்ளன. இது தாய் மற்றும் குழந்தை இருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், குழந்தை பிறந்த பின்னரும் தடுப்பூசி மிகவும் முக்கியமானது.

உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கான எளிய வழி, மருத்துவரிடமிருந்து ஒரு தடுப்பூசி அட்டவைணையைப் பெறுவது. இது உங்கள் கர்ப்ப காலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட அட்டவணையாக இருக்க வேண்டும் மற்றும் குழந்தையின் உடல்நிலை தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி தவறவிட்டால் என்ன செய்வது?

இப்போது பல பெற்றோரின் மனதில் இருக்கும் ஒரு கேள்வி இது தான், உங்கள் குழந்தையின் நோய்த்தடுப்பு அட்டவணை ஒரு மருத்துவரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய தேதியில் தடுப்பூசி போடாமல், அதை தவறவிட்டால் என்ன செய்வது. தடுப்பூசி போடாமல் இருப்பதும் குழந்தைக்கு பேராபத்தையும் விளைவிக்கும். தடுப்பூசி போடாமல் விடுவதை காட்டிலும், தாமதமாயினும் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது.

தற்போது, சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் நினைத்தால் குழந்தை பராமரிப்பு மருத்துவரிடம் இருந்து புதிய தடுப்பூசி அட்டவணையைப் பெறலாம். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பிபிஇ பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது மருத்துவர்களுக்கு மட்டுமல்ல நோயாளிகளுக்கும் முக்கியமானது. இந்த தளர்வை பயன்படுத்தி உங்கள் குழந்தைக்கு தவறவிட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

vaccination-children-kidhours
vaccination-children-kidhours

தடுப்பூசி என்றால் பயமா?

கொரோனா பரவலால், தற்போது பலர் மருத்துவமனைக்குச் செல்ல பயப்படுகிறார்கள். ஆனால் உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது மற்றும் தடுப்பூசியிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது ஆபத்தை அதிகரிக்கும். தடுப்பூசி போடுவதற்கான மற்றொரு பயம் என்னவென்றால், தடுப்பூசி போட்டபின் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியினால், இந்த மன அழுத்தமும் குறைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் ஒரு சிறுதுளி உங்கள் குழந்தையை டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் கடுமையான இருமல் போன்ற அபாயமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. முகமூடி அணிவது, கையுறைகளைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு உபகரணங்கள், கிருமி நாசினி தெளித்தல் போன்ற தனிப்பட்ட கவனிப்பு மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். மேலும், அது நோய்தொற்று சார்ந்த அச்சத்தில் இருந்து நாம் விலகி இருக்கவும் உதவும். இப்போது நீங்க உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட சிந்திக்கிறீர்களா? இதுதான் சரியான நேரம், உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, புதிய தடுப்பூசி அட்டவணையை பெற்று, குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்திடுங்கள்..

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.