குழந்தைகளின் கல்வி அறிவை பலவழிகளில் மேம்படுத்தமுடியும். குறிப்பாக கருத்துள்ள திரைப்படங்களின் மூலமும் வளர்க்கமுடியும்.
குழந்தைகளின் கல்வி அறிவை பலவழிகளில் மேம்படுத்தமுடியும். குறிப்பாக கருத்துள்ள திரைப்படங்களின் மூலமும் வளர்க்கமுடியும். அத்தகைய திரைப்படங்களை தொகுத்திருக்கிறோம். அவை என்னென்ன திரைப்படங்கள்? அவை எதற்காக தனித்துவமானவை என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
லயன் கிங் THE LION KING:
காடுகள் பற்றியும், காட்டு விலங்குகளின் வாழ்க்கை பற்றியும் அழகாக விளக்கும் திரைப்படம் இது. விலங்குகளின் பெயர், அதன் குணாதிசயம், அவை சாப்பிடக்கூடிய உணவு வகைகள், வாழ்க்கை முறை பற்றி குழந்தைகளை கவரும் வகையில் படமாக்கி உள்ளனர். அதனால் வன உயிரியியல் பூங்காவிற்கு சென்று வந்த உணர்வை, ‘லயன் கிங்’ திரைப் படம் நிச்சயம் உண்டாக்கும்.
வாட்ஸ் ஆன் யுவர் பிளேட் WHAT’S ON YOUR PLATE:
ஆரோக்கியமில்லாத துரித உணவின் வரலாற்றையும், துரித உணவு சாப்பிடுவதால் ஏற்படும் உடல் சீர்கேட்டையும், இந்த ஆவணப்படம் விளக்குகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகள் எந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும், எதை தவிர்க்க வேண்டும், காய்கறி பழங்களில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன, எந்த குறைபாட்டிற்கு எந்த காய்கறி பழங்களை சாப்பிடவேண்டும் என்பது போன்ற பல ஆரோக்கிய விஷயங்களை இந்த படம் அழுத்தமாக பேசுகிறது.
அப் UP:
ஒரு வீடு பலூன்களின் மூலம் வானில் பறந்தால் எப்படி இருக்கும்?, இதையே ‘அப்’ என்ற அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி உள்ளனர். நகைச்சுவை காட்சி களுக்கு மத்தியில், குழந்தைகள் முதியவர்களிடம் எப்படி பழகுவது, குழந்தை-முதியோர்களுக்கான உறவு எப்படி இருக்கவேண்டும்… போன்ற பல உறவு எதார்த்தங்களை அப் திரைப்படம் விளக்குகிறது. கூடவே பல அறிவியல் விந்தைகளையும் சொல்லித்தருகிறது.
மார்ச் ஆப் பெங்குவின் MARCH OF THE PENGUINS :
அண்டார்டிகா கண்டத்தின் நில அமைப்பு, அரிய வகை பெங்குவின்களின் வாழ்க்கை முறை, பனிப்பாறை பிளவு, வெப்பமயமாதல்… போன்ற பல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நினைத்தால், மார்ச் ஆப் பெங்குவின் திரைப்படத்தை போட்டுக்காட்டுங்கள். பூமி யில் இருக்கும் மற்றொரு உலகை இந்த படம் கலக்கலாக காட்டிவிடும்.
இது போல நிறைய திரைப்படங்கள் உள்ளன. இதன் மூலம் குழந்தைகளின் பொழுதை நல்லவிதமாக கழிக்கவும், கல்வி அறிவை வளர்க்கவும் முடியும்.