Wednesday, January 22, 2025
Homeசிறுவர் செய்திகள்மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு King's Issuance of currency in UK

மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு King’s Issuance of currency in UK

- Advertisement -

King’s Issuance of currency in UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்தானியாவில் நீண்ட காலம் ராணியாக இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) கடந்த மாதம் 8-ம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார்.

King's Issuance of currency in UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்
King’s Issuance of currency in UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதனைத்தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூடினார்.

- Advertisement -

அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

பிரித்தானிய நாணயங்களை அதிகாரபபூர்வமாக தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனம் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை நேற்று வெளியிட்டது.

இதோடு மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 நாணயங்களும் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது.

மறைந்த அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாவும், அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – King’s Issuance of currency in UK

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.