Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்5G - சீனாவில் அறிமுகம்

5G – சீனாவில் அறிமுகம்

- Advertisement -

இணையத்தின் அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

- Advertisement -

5G-China-arimukamஇதற்கு குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி. என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும்.பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவன செல்போன்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4G LTE தொழில்நுட்பத்தினைவிட 10 முதல் 100 மடங்கு 5 ஜியின் பதிவிறக்க வேகம் அதிகம் என்று கூறப்படுகிறது

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.