Monday, January 20, 2025
Homeகல்விகட்டுரைமுத்திரைகளை சேகரிப்போம் கட்டுரை Tamil Essay Collecting Stamps

முத்திரைகளை சேகரிப்போம் கட்டுரை Tamil Essay Collecting Stamps

- Advertisement -

Tamil Essay Collecting Stamps     சிறுவர் கட்டுரை

- Advertisement -

முத்திரை சேகரிப்பு ஒரு பிரபலமான பொழுதுபோக்கு மற்றும் இது என்றும் அழைக்கப்படுகிறது

முத்திரை சேகரிப்புக்கு பொறுமையும் உறுதியும் தேவை.

- Advertisement -

ஒவ்வொரு பருவத்தினரும் தத்தம் பருவத்துக்கேற்ப பொழுது போக்குகளில் ஈடுபடுவது வழக்கம். சிறுவர். இளைஞர், வளர்ந்தோர், முதியவர்கள் என்போரனைவரும் தத்தம் உடல், உள நிலைக்கும். வயதுக்கும் தக்கவகையில் வெவ்வேறுவிதமான பொழுது போக்குகளைக் கொண்டிருப்பர். அவரவர் வசதிக்கேற்ப அவர்கள் ஈடுபாடுகளும் அமையும்.

- Advertisement -

பொதுவாக பாடசாலைமாணவர்கள் எவ்விதமான பொழுது போக்குகளை விரும்புகிறார்கள் என்று பார்ப்போம்.

இன்று மாணவப் பருவத்தினர் பெரும்பாலும் தொலைக்காட்சிபார்த்தல். கணனிவிளையாட்டு, வானொலிகேட்டல், உள்ளகவிளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். முத்திரைசேகரித்தல், சிறியசிறிய கதைகளைவாசித்தல், சஞ்சிகைகள்படித்தல், பேனாநண்பர்கள்தொடர்பு, என்பவைகளையும் தம் பொழுதுபோக்குகளாகக் கொண்டிருப்பர். சிலர் மீன்வளர்த்தல், பூந்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்தல் போன்றவற்றை தம் பொழுதுபோக்காகக் கொண்டிருப்பர் .பொழுதுபோக்குகள், ஈடுபாட்டோடும் முயற்சியோடும் செய்யப்படுபவை. அவை மாணவர்களுக்கு உள்ளக்களிப்பை உண்டு பண்ணுகின்றன. ஆத்ம திருப்தியைக் கொடுத்து நல்வாழ்வுக்கும் வித்திடுகின்றன. ஜீவனோபாயத்துக்குக் கூட வழிசமைக்கின்றன.

சிறப்பாக இதனால் மனஇறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. பொழுதுபோக்குகள் எமது அறிவை வளர்த்தெடுக்கிறது; புதுப்புது அனுபவங்களை பெற்றுத்தருகிறது. குழந்தைகளுக்கு இப்பொழுதுபோக்குகள் மிக உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தருவன. எப் பருவத்தினருக்கும் அவரவர் பொழுதுபோக்குகள் மனத்திருப்தியை ஏற்படுத்துகின்றன.

Tamil Essay Collecting Stamps     சிறுவர் கட்டுரை
Tamil Essay Collecting Stamps     சிறுவர் கட்டுரை

உதாரணமாக, மாணவர்களாகிய நாம் முத்திரை சேகரித்தலை எமது பொழுதுபோக்குக்காகக் கொள்வதன்மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் பார்ப்போம்.

முத்திரைசேகரித்தல் என்ற பொழுதுபோக்குமூலம் நாம் உலகிலுள்ள பல நாடுகளின் வரலாறுகளையும், புதியதகவல்களையும் அறிகிறோம். அல்பம்” தயாரித்து முத்திரைகளைப் பாதுகாப்பது ஒரு முறையாகும். முத்திரைகளில் பல வடிவங்களைக் காணுகிறோம். அவற்றிலுள்ள வர்ணங்களும், படங்களும் எமது அழகுணர்ச்சியை மெருகூட்டுகின்றன. அதிகூடிய தொகைமதிப்பில் பல்வேறுவிதமான முத்திரைகளைச் சேகரிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் புதியபுதிய தொடர்புகள் எமக்கு ஏற்படுகின்றன. அண்மை நண்பர்களும், பேனாநண்பர்களும் சேருகிறார்கள். உறவுகளும் வளர்கின்றன.

பலநாடுகளுக்குரிய முத்திரைகள் மூலம் உலகின் வளங்களையும் புதுமைகளையும் அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. பொதுஅறிவு விரிவடைகிறது. இது பொழுதுபோக்கின் ஒரு விடயமே. இப்படி மற்றைய பொழுது போக்குகளால் ஏற்படும் நன்மைகளையும் நாம் அறிய முடியும்.

மேலேயுள்ளதைவிட இசைபயிலுதல், இசைக்கருவிகளை மீட்கப் பயிற்சிபெறல், வர்ணம்தீட்டுதல், சிற்பங்கள் செய்தல், ஓவியங்கள் வரைதல், பனைஓலை, கோரைப்புல் ஆகியவற்றினைக் கொண்டு அலங்காரப் பொருள்களைத் தயாரித்தல், கழிவுப் பொருள்கள் மூலம் உருவங்கள் அலங்காரப்பொருட்கள் உருவாக்குதல் என்பனவும் மாணவப் பருவத்தினரின் பொழுதுபோக்குகளாக அமைகின்றன. இவை பொழுதுபோக்குகளாக மட்டுமன்றி பெரும் வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவக்கூடியன. பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசித்தல், நூலகங்களில் வாசிப்பில் ஈடுபடுதல், வானொலி தொலைக்காட்சிகளைப் பயனுள்ள வகையில் அனுபவித்தல் மாணவர்களுக்கு அதிக நன்மைதரும் பொழுதுபோக்குகளாகும். என்பன இவை மாணவர்களை பின்நாளில் பெரிய படைப்பாளிகளாக, கலைஞர்களாக, விஞ்ஞானிகளாக, தொழில் விற்பன்னர்களாக, தலைவர்களாக வர வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

எனவே,நாம், நமது உடல், உள வளத்துக்கேற்ப எமக்கு ஈடுபாடுள்ளதும், பயனுள்ளதுமான முத்திரை சேகரித்தல் முதற்கொண்ட பொழுதுபோக்குகளை தெரிவுசெய்வோம். பொழுதுபோக்கு சந்தோசத்தையும். அதன்மூலம் கிடைக்கும் அறிவு மனங்கொள்வோம். வாழ்வைப் பயனுள்ளதாக்குவோம். தரும் விருத்தியையும்.

 

Kidhours- Tamil Essay Collecting Stamps,Tamil Essay Collection Stamps

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.