Tamil Essay About Cheetah – Siruththai Katturai சிறுவர் கட்டுரை
சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணும்.
சிறுத்தைகள் வழுவழுப்பான, தங்க நிற மயிர்ப் போர்வையையும், அதன் மீது கறுப்புத் திட்டுகளையும் கொண்டவை.
ஒல்லியான உடல் வாகும், திறனும் கொண்டது சிறுத்தையின் உடல். ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தது. நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது
சிறுத்தை, தோற்றத்தில் சிங்கம் மற்றும் புலியை விட சிறிது. பாலூட்டிகளில் மிகவும் துடிப்பான விலங்கு. ஓரளவு பாலைவனமாக உள்ள பகுதிகளில் பாறைகள் நிறைந்த மரங்களற்ற பகுதிகளில் வாழும். சிறுத்தை, மங்கிய நிறத்துடன் உருவத்தில் பெரியதாக தோற்றம் அளிக்கும்.
சிறுத்தை பொதுவாக, 1 முதல் 1.5 மீட்டர் நீளமும் 90 கிலோ எடையும் கொண்டிருக்கும். தாழ்வான காடுகள் நிறைந்த பகுதிகள் அல்லது மலைப்பிரதேசங்களில் காணப்படும்.
ஒரு சிறுத்தை 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது.
சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும்.
ஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என தரையில் வசிக்கும் விலங்கினங்களில் வேகமாக ஓடும் திறன் கொண்டது சிறுத்தைசிறுத்தை, அளவில் சிறிய தாகவும், கருமையான உடலில் பெரிய பட்டைகளும், வளையங்களும் கொண்டு காட்சியளிக்கும்.
சில பகுதிகளில் கரிய நிறமுடைய ‘கருஞ்சிறுத்தைகள்’ காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சிறுத்தை, அழகிய மென்மையான வழவழப்பான மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய தோலும், அதில் ரோஜா வடிவ வளையங்களும் பெற்றுத் தோற்றமளிக்கும்.
பகல் நேரத்தில் சிறுத்தை புகையிலை இலைகள் நிறைந்த மரத்தில் பதுங்கி இருக்கும்.
கொல்லப்பட்ட இறைச்சி பெரிதாக இருப்பின், ஒரே நேரத்தில் உண்ண முடியாது. கையால் உண்டது போக எஞ்சிய உடலை, மரத்தின் மேற்பகுதிக்கு இழுத்துச் சென்று மறைத்து வைத்துக் கொள்ளும்.
ஒரே வகையான உணவிற்குப் போட்டியிடுவதால், சிறுத்தைக்கு விரோதியாக விளங்குவது புலி. காட்டுநாய்களும், கழுதைப் புலிகள் தைரியமாக சிறுத்தையை எதிர்க்கவில்லை.
Kidhours – Tamil Essay About Cheetah, Tamil Essay About Cheetah Article
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.