Friday, November 22, 2024
Homeபெற்றோர்பிள்ளைகள் விளையாடும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை என்று தெரியுமா..? #Secrets behind...

பிள்ளைகள் விளையாடும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை என்று தெரியுமா..? #Secrets behind kids playing

- Advertisement -
kids-playing-kidhours
kids-playing-kidhours

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விளையாடும் குழந்தைகளில் 72 சதவீதம் பேர்கள் மூளை தாக்கத்தினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. இதனால் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்ளோவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாலும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் நம் கண் பார்வையில் இருந்து தப்பி விடுவார்கள்.

- Advertisement -

இதனால் சில எதிர்பாராத விஷயங்களும் நடந்து விடுகிறது. மூளை தாக்கம் என்பது ட்ருமட்டிக் ப்ரைன் இஞ்சூரி அதாவது டிபிஐ என்று அழைக்கப்படுகிறது. இந்த டிபிஐக்கள் மூளையின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கிறது. இந்த டிபிஐ தலையில் ஏற்படும் அடி, குழந்தைகளை தலையில் கொட்டுதல் போன்ற காரணங்களால் ஏற்படலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகிறது. அதற்காக மூளையில் ஏற்படும் அனைத்து அடிகளும் கொட்டுகளும் டிபிஐக்கு வழிவகுக்காது. சில டிபிஐகள் லேசாக மூளையை பாதிக்கும்.

மேலும் நோய்கட்டுப்பாடு மையம் ஆய்வின் படி யு.எஸ். அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 812000 குழந்தைகள் 17 வயதுக்குள்ளான மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மூளையதிர்ச்சி மற்றும் பிற டிபிஐகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பாதிக்கும் விஷயங்கள் மொட்டைமாடிகள் படுக்கைகள் கால்பந்து மாடிப்படி மிதிவண்டிகள் கூடைப்பந்து சுவர்கள் நாற்காலிகள் கால்பந்து மேஜைகள் அதாவது மாடிப்படிகள் மற்றும் மொட்டைமாடிகளில் நின்று கீழே பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.

- Advertisement -

இளம் வயதினர் மற்றும் பெரியவர்களுக்கும் பொதுவான மூளை அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. குழந்தைகள் பிறந்த குழந்தைகள் முதல் 4 வயது குழந்தைகள் வரை உள்ளவர்கள் கண்ணாடி மற்றும் வீட்டில் உள்ள சில பொருட்களினால் மூளை அதிர்ச்சியை அடைகிறார்கள். 10 வயது முதல் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் டிபிஐக்கு காரணமாக படுக்கைகள் உள்ளன. அதிலும் கட்டிலில் தூங்கும் குழந்தைகளுக்கு மூளை அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

- Advertisement -

குழந்தைகள் படுக்கையில் தூங்கும் போது தப்பி தவறி கீழே விழ அதிக வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் மூளைகளில் அதிர்வு ஏற்படுவதால் டிபிஐ ஏற்படுகிறது. 5 வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ளவர்களின் ஆர்வம் குறிப்பாக கால்பந்து, சைக்கிள் மற்றும் கூடைப்பந்துகளை நோக்கி உள்ளது. இதனால் டிபிஐயால் அதிக அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. டிபிஐ சதவீதம் டிபிஐகள் 28.8 சதவிகிதம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலிருந்தும், 17.2 சதவிகிதம் வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களினாலும் 17.1 சதவிகிதம் வீட்டின் கட்டமைப்புகளினாலும், 2.7 சதவிகிதம் குழந்தைகளுக்கு நர்சரி உபகாரணங்களினாலும் மற்றும் 2.4 சதவிகிதம் பொம்மைகள் மற்றும் பிற தயாரிப்பு பொருட்களினாலும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

குழந்தைகள் டிபிஐ குழந்தைகள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள் எனவே வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களினால் தலையில் ஏற்படும் சில காயங்கள் மற்றும் அதிர்வுகளினால் டிபிஐக்கு வாய்ப்புள்ளது. சற்று வளர்ந்த குழந்தைகள் தான் விளையாடுவதில் அதிக நேரத்தை ஒதுக்குகிறார்கள். இதில் காயமடைவதாலும் குழந்தைகளுக்கு டிபிஐ ஏற்படலாம். கார் இருக்கைகள் குழந்தைகளுக்கு தலையில் ஏற்படும் காயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கார் இருக்கைகள்.

கார் இருக்கைகளில் குழந்தைகளை அமர வைக்கும் போது சரியான முறையில் அமர வைப்பது சரி தான். ஆனால் அவற்றில் அவர்கள் முட்டி கொள்ளாமல் பார்த்து கொள்ளுங்கள். மேலும் குழந்தைகள் அவற்றை தள்ளும் போது அல்லது குனியும் போதும் தலையில் முட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே கார் இருக்கைகளை கையாளும் போது கவனம் தேவை. விளையாட்டு பாதுகாப்பு டிபிஐ பற்றி முதலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விளையாடும் குழந்தைகள், சொல்லிகொடுப்பவர் மற்றும் பெற்றோர்கள் என அனைவர்க்கும் தெரிய வேண்டியது அவசியம். விளையாட்டுகளில் உள்ள நடைமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். விளையாடுவதற்கு தேவையான பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து விளையாட வேண்டும். விளையாடுவதற்கு தேவையான விளக்குகள் மற்றும் மைதானம் ஒழுங்கான முறையில் அமைந்து இருக்க வேண்டும். விளையாடும் போது தலையில் அடிகள் படாமல் விளையாடுமாறு அறிவுறுத்துங்கள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.