Train Accident 13 Dead சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி பயணித்த விசேட பயணிகள் ரயிலொன்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்காட் நோக்கிச் பயணித்த ரயிலொன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையின் சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாரே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Train Accident 13 Dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.