Kids News Silver teeth swallowed சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்செயலாக விழுங்கிய வெள்ளி பற்கள் வரிசை, அவரது நுரையீரலில் சிக்கிக்கொள்ள, அதனை வெற்றிகரமாக அகற்றி இளைஞரின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், தன் பற்கள் மீது 4 புள்ளி ஒன்று சென்டி மீட்டர் அளவுள்ள வெள்ளி பற்கள் வரிசையை மாட்டியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டபோது எதிர்பாராத விதமாக அதனை விழுங்கிவிட்டார். அந்த வெள்ளி பற்கள் வரிசை இளைஞரின் நுரையீரல் காற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டது.
அதன்படி உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற இளைஞருக்கு, எக்ஸ்-ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள், ப்ரோன்கோஸ்கோபி முறையில், சிறிய கேமரா பொருத்தப்பட்ட மெல்லிய கருவியை நுரையீரலின் காற்றுப்பாதைக்குள் விட்டு, வெள்ளி பற்கள் வரிசையை வெளியே எடுத்தனர்.
பின்னர் நுரையீரலில் ஏற்பட்ட சிறிய அளவிலான ரத்தக்கசிவை சலைன் மூலம் சரி செய்தும், சுவாசப்பாதையில் இறுகிய தசைகளை ஸ்டீராய்டு கொடுத்து சரிசெய்தும், இளைஞரை முழுமையாக குணமாக்கி வீட்டிற்கு அனுப்பினர்.
Kidhours- Kids News Silver teeth swallowed
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.