Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்70 ஆண்டுகள் நிறைவு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் Kids News Queen UK

70 ஆண்டுகள் நிறைவு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் Kids News Queen UK

- Advertisement -

Kids News Queen UK  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டுகால ஆட்சியைக் கவுரவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் மரங்களை நடவேண்டும் என இளவரசர் சார்லஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து அரசராக இளவரசர் சார்லஸ் பதவியேற்கும்போது அவரது மனைவி கமிலா, ‘ராணி’ என அழைக்கப்படவேண்டும் என்று தனது விருப்பத்தை இரண்டாம் எலிசபெத் இந்நாளில் வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்…

- Advertisement -
Kids News Queen UK
Kids News Queen UK

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, மகாராணியாக முடிசூடிக் கொண்டபோது அவருக்கு வயது 25தான். இங்கிலாந்து வரலாற்றில் இதற்கு முன்பு விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த நிலையில், அதனை கடந்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். 1952ல் நிகழ்ந்த இவரது முடிசூட்டு விழா, உலகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட முதல் பிரமாண்ட நிகழ்வு ஆகும்.

- Advertisement -
Kids News Queen UK
Kids News Queen UK

இவர் இங்கிலாந்து ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட COMMONWEALTH எனப்படும் ஒரு காலத்தில் இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவை தவிர இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநரும் இவரே ஆவார்.

பிரிட்டனில் மன்னராட்சி முடிவு பெற்று மக்களாட்சி நடைபெறும் போதிலும், இங்கிலாந்து பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும். இவர் இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று போற்றப்படும் வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 இங்கிலாந்து பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் எப்போதுமே சூரியன் அஸ்தமிக்காது என்று வர்ணிக்கப்பட்ட கால கட்டத்தில் உலக நிலப்பரப்பில் 25 சதவீதத்தை மகாராணியாக ஆட்சி செய்த பெருமையும் இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு..

1947- ல் இரண்டாம் எலிசபெத் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் வாழ்ந்து வரும் நிலையில், கடந்தாண்டு தனது 99 வயதில் பிலிப் காலமானார்.

இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. இதற்காக ஜுன் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

kidhours – Kids News Queen UK , Kids News Queen UK king

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.