Impact of Solar Eclipse சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் பாதுகாப்புக்கள் இல்லாமல் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் அந்நாட்டு வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகமாக கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பறந்து காணப்படுவதாக பதிவாகியுள்ளன.
குறித்த சூரிய கிரகணம் காரணமாக கண்களில்
பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சூரிய கிரகணம் கடந்த 8ம் திகதி கனடாவில் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமாக பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அதிகமான பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போதும் பலர் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளில் அதனை பார்வையிட்டுள்ளனர்.
இதனால் ஆபத்துக்கள் குறைவாக பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்பது இங்கு குறிப்பிட்டதக்கது.
Kidhours – Impact of Solar Eclipse
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.