Thirukkural 108 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
அறத்துப்பால் / இல்லறவியல் / செய்ந்நன்றி அறிதல்
”நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.’‘
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
—மு. வரதராசன்
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
—சாலமன் பாப்பையா
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 108
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.