Tuesday, December 24, 2024
Homeசிறுவர் செய்திகள்பட்சிராய் சூறாவளி அதிகரிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை Kids Latest News Cyclone #Batsirai

பட்சிராய் சூறாவளி அதிகரிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை Kids Latest News Cyclone #Batsirai

- Advertisement -

Kids Latest News Cyclone  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மடகாஸ்கரில் பகுதியில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (11-02-2022) 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இக்கோங்கோவில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்களை இன்னும் சேகரித்து வருவகின்றனர்.

- Advertisement -

எனினும், இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.

- Advertisement -

சமீபத்திய புதுப்பிப்பு வெள்ளிக்கிழமை முன்பு அறிவிக்கப்பட்ட 111 இறப்பு எண்ணிக்கையை உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Kids Latest News Cyclone
Kids Latest News Cyclone

சூறாவளி 124,000 க்கும் அதிகமான மக்களையும், அவர்களது வீடுகள் சேதப்படுத்தி அழிக்கப்பட்டதாகவும், மேலும் சுமார் 30,000 பேர் இடம்பெயர்ந்து 108 இடங்களில் முகாமிட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அனா வெப்பமண்டல புயல் 55 பேரைக் கொன்று 130,000 பேரை வடக்கே நாட்டின் வேறு பகுதியில் இடம்பெயர வைத்த இரண்டு வாரங்களுக்கு பிறகு, மடகாஸ்கரின் இரண்டாவது அழிவுப் புயலாக பட்சிராய் மாறியுள்ளது.

Kids Latest News Cyclone
Kids Latest News Cyclone

இந்நிலையில் ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தீவு நாடு, ஏற்கனவே தெற்கில் உணவுப் பற்றாக்குறையுடன் போராடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Kids Latest News Cyclone

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.