Sunday, February 23, 2025
Homeசுகாதாரம்மூச்சு அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்

மூச்சு அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்

- Advertisement -

குழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக்குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

kids-health-tami
குழந்தையின் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனிய வைத்து, ஒரு கையால் தாங்கிய படி, தோள் பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியே வந்துவிடும்.
பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.குழந்தைகள் எப்பொழுதும் நமது கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.
குறிப்பாக, இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்தால் பெரிய குழந்தை கீழே போடும் பென்சில், சிறிய ரப்பர் துண்டுகள், விளையாட்டு பொருட்களை சின்ன குழந்தை எடுத்து வாயில் போட வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்

kids-health-tami

- Advertisement -

எவ்வாறயினும் வைத்தியசாலை செல்வதே மிகவும் சிறந்ததும் சரியான பாதுகாப்புமாகும்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.