Sunday, December 1, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புசூரியனை ஆய்வு செய்ய தயாராகிறது ஆதித்யா எல்1 - Research in Sun Adhithya L1

சூரியனை ஆய்வு செய்ய தயாராகிறது ஆதித்யா எல்1 – Research in Sun Adhithya L1

- Advertisement -

Research in Sun Adhithya L1  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சந்திரயான்3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்தி வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி உள்ளனர்.

இதன்படி குறித்த விண்கலத்தை அmனுப்புவதற்கான கவுண்டவுன் இன்றுமுதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நாளை சனிக்கிழமை (2ஆம் திகதி) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் இன்று முதல் தொடங்குவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Research in Sun Adhithya L1  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Research in Sun Adhithya L1  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவித்தார்.அத்துடன் சந்திரயான் 3 நன்றாக வேலை செய்கிறது என்றும் திட்டமிட்டப்படி அனைத்து தரவுகளும் நன்றாக வருவதாகவும் சோம்நாத் தெரிவித்தார். மேலும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய 14 ஆம் நாளில் அதன் திட்டம் நிறைவடையும் என்றும் சோம்நாத் தெரிவித்தார்.

ஆதித்யா எல்1 விண்கலம் நான்கு மாதங்கள் பயணம் செய்து 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை அடையும். அதன்பிறகு தொடர்ந்து சூரியன் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்1 மிஷன் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Research in Sun Adhithya L1 , Research in Sun Adhithya L1 update

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.