Earthquake in Philippine உலக காலநிலை செய்திகள்
தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று (17) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்படக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.78 கிலோ மீற்றர் (48 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மலைப்பாங்கான தீவின் பரந்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Kidhours – Earthquake in Philippine
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.