Lung Cancer in Tamil சுகாதாரம்
உலகில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளில் முக்கியமான ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. சுவாசத்தை பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக, இளம் வயதினருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணமான அமைகிறது.
90 வித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகிறது. மேலும் காற்றுமாசு, புகை பிடித்தல், மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணிகளாக கருதப்படுகின்றன.
ஆரம்பக்கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது கடினம். ஏனெனில், இதற்கான அறிகுறிகளை சாதாரண சுவாசத்தொற்று எனக் கருதி கடந்துவிடுவோம். சில சமயங்- களில், அறிகுறிகள் ஏதும் தென்படுவது கிடையாது.
புற்றுநோய் கட்டி வளர்ந்த பிறகோ அல்லது வியாதி முற்றிய பிறகோதான் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலான சமயங்களில் கண்டறியப்படு- கிறது. முன் – கூட்டியே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்துவது சுலபம். இதனால், நுரையீரல் புற்றுநோய்க்- கான அறிகுறிகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்:
1.தீராத இருமல்
2.இருமலில் ரத்தம் வெளியேறுதல்
3.மூச்சுத்திணறல்
4.குரல் கரகரப்பு
5.அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல்
6.நெஞ்சுவலி
7.உடல் எடை இழப்பு
8.பசியின்மை
9.தலைவலி
நுரையீரல் புற்றுநோய் கட்டி வளர்ந்தால் முதுகு, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு வலி, மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படலாம், மேற்கண்ட அறி- குறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Kidhours – Lung Cancer in Tamil , Lung Cancer in Tamil essay
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.