Amazing Characteristics of Duck சிறுவர் கட்டுரை
வாத்துக்கள் தூங்கும் போதும் விழிப்புடன் இருக் கும். அதாவது வாத்தின் மூளை அவற்றின் உறக் கத்தின் போது இரண்டாக செயல்ப டுகிறது. ஒரு மூளை உறங்கும் நிலை யிலும் மற்ற ஒரு பகுதி சுறு சுறுப்பு டனும் இருக்குமாம். வாத்துகள் கூட்டமாக உறங்கும் போது கண்களை திறந்துகொண்டே உறங்கும். தங்களை வேட்டைக்கா ரர்களிடம் பாதுகாக்க இவ்வாறு செய்கின்றன.
ஆங்கிலத்தில் ‘ஸ்பொட் பில்ட் டக்’ என்று அழைக்கப்படும் வாத்து இனமும் உண்டு தமிழில் ‘புள்ளி மூக்கு வாத்து’ எனப் படுகிறது. இதன் மஞ்சள் நிற அலகில், சிவப்புப் புள்ளிகள் இருக்கும். இதனால் ‘சிவப்பு மூக்கன்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.
இது நீருக்கு அடியில் சென்று உணவு தேடாது. நீரின் மேற்பு றத்திலேயே இருக்கும் பாசி, சின்ன சின்னத் தாவரங்கள் போன்ற வையே இவற்றின் உணவு, வடக்கில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், தெற்கில் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலும் இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்.
ஆசிய நாடுகள் முழுக்க நீர்நிலைகளில், எல்லாப் பருவ காலத்திலும் காணப்படும் பறவை வாத்துஇனமாகும் இது வலசை செல்லும் பறவை கிடையாது. எப்போதும் ஆண். பெண் பறவைகள் ஜோடியாக இணைந்து காலை, மாலை வேளையில்தான் இரைதேடும். மதிய நேரத்தில், கண்களை மூடிக்கொண்டே, தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டவை.
Kidhours – Amazing Characteristics of Duck
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.