தேடப்படும் வர்த்தக கோடீஸ்வரர் ஜோலோ திரெங்கானுவில் உள்ள பூலாவ் பீடோங் தீவை மேம்படுத்த 500 கோடி வெள்ளியைத் திரட்ட முயன்றார் என நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அரசாங்க அதிகாரிகள், கருவூல அதிகாரிகள் கையெழுத்திடும் வகையில் அவர் இதற்கான கடிதங்களைத் தயாரித்தார் என்று திரெங்கானு முன்னாள் முதலீட்டு வாரியத்தின் தலைமைச் செயலதிகாரியான ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹல்மி கூறினார்.
’டிஐஏ எனப்படும் திரெங்கானு முதலீட்டு வாரியம் 2 வெள்ளி கம்பெனி. ஆனால் 500 கோடி வெள்ளியை அது திரட்ட முயன்றது. அது பெறும் கடனுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் என்றும் பூலாவ் பீடோங் தீவை மேம்படுத்த அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நிதியமைச்சின் அதிகாரிகளையும் நிதி அமைச்சரையும் இது தொடர்பாக அடிக்கடி கண்டு பேசுமாறு ஜோலோ கேட்டுக் கொண்டார் என்றார் அவர்.