கீரை வாகைகள் என்றாலே பச்சை தன்மையான குளிர்மையான தாவரங்களே நினைவிற்க்கு வருகின்றன.
இவற்றை உணவில் சேர்ப்பதன் முக்கியத்துவம் நம்மை விட நம் முதியோர்களே அறிந்திருந்தனர் தற்காலத்தில் அதிகமானோர் கீரை வகைகளை விரும்புவதில்லை ஆனால் அது தவறு அவற்றிலே அதிகளவான இரும்பு மற்றும் எனைய சத்துக்கள் காணப்ப்ச்டுகின்றன.
சந்தைகளில் விற்பனை செய்யும் கீரை வகைகள் இரசாயன மருந்துக்கள் இட்டு வளா;கப்படுவது எமது உடல் ஆரோக்கியத்திற்க்கு நல்லதன்று. அவற்றை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான கீரை வகைகளை நாமே எமது வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து பயன்களை பெற்றுக்கொள்ளலாம் அதற்கான உதவிகளையே பின்வருமாறு தௌpவாக்கிக் கொள்ளலாம்
உணவுக்காக எடுத்துக் கொள்ளக் கூடிய தாவர இலைகள்,கொழுந்து மற்றுக் தண்டு பகுதிகள் பொதுவாக கீரைவகை என அழைக்கப்படும். கீரை வகைகளை மிகவும் சுவையாக சமைத்துக் கொள்ள முடியும். மனிதனினஉடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. சுண்டல்,பொரியல்,சம்பல,சலட் மற்றும் கஞ்சி,போன்ற,பல்வேறு,உணவுகளுடன் கீரைவகைகளையும் எடுத்துக்கொள்ளமுடியும். கீரைவகைகளை உணவாக உட்கொள்வதால் மனித உடலுக்கு வேண்டியவடற்றமின் மற்றும் கனிப்பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுத்தோட்டத்தில் செய்கை பண்ணிக் கொள்ள கூடிய இலைமரக் கறி போன்ற சிலகீரை வகைகள் இவையாகும்.
1.வல்லாரை
2.பென்னாங்கன்னி
3.தம்பலை
4. பசளி
5. அகுண
6. கேத
7. கிரிஎந்த
8. கங்குன் கீரை
9. அகத்திகீரை
10.சாரனை
11. கிரிஅகுண
12.கடுகு
13.மிஞ்சி
14.நீரமுள்ளி
15.அவரை
16.பூசனி
17.முருங்கை
18.மரவள்ளி
19.கோடிதோடை
இந்த கீரை வகையில் வல்லாரை,அசமோகம்,கடுகு,அகுண போன்ற இலைவகைகளில் மிகவும் சுவையான சம்பல் மற்றும் சலட் ஆகியன செய்து கொள்ள முடிவதுடன் கூடியஅளசில் கறிகளும் சுண்டல்களும் தயாரித்துக்கொள்ள முடியும். அத்தோடு கீரை சிலவற்றை ஒன்றாக சேர்த்து கலவன் கீரைசுண்டலுக்காக எடுத்துக் கொள்ளமுடியும். நீரமுள்ளி,வல்லாரை போன்றசில இலை வகைகளை காயவைத்து தேனீர் பானமாக பருக முடியம். கீரை வகை போன்றே இலை மரக்கறி செய்கை பண்ணுவதும் மிகவும் இலகுவானது. மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 5 கீரை வகைகள் தொடர்பாக இங்குபார்ப்போம்.
வல்லாரை
வைத்திய கருத்துக்களுக்கு அமைய வல்லாரை அதிக இரும்பு சத்துள்ள கீரை வகையாகும். கடந்த காலங்களில் வயல் நிலங்களில் வரப்புக்களில் மற்றும் சிறிய குளங்கள் இவாய்க் கால்களுக்கு அருகில் சுதந்நிரமாக வளர்ந்தன. நவீன காலத்தில் பீடை நாசினி மருந்துகளினால் வல்லாரையின் இயற்கையாக வளரும் தன்மை இல்லாமல் போயுள்ளது. படர்ந்து நிலத்துடன் ஒட்டி செடியாக வளரும் வல்லாரை மூலிகையாக மிகவும் பெறுமதியானது. பொதுவாக வல்லாரை இலைகள் மிகவும் சிறியவை ஆயினும் பெரிய இலைகளையும் நீண்ட நார்களையும் கொண்ட வல்லாரை சந்தையில் கிடைக்கும் இவை கூட்டு வல்லாரை எனஅழைக்கப்படும். வல்லாரை கீரையை பாத்திகளில் அல்லதுபாத்திரங்களில் இலகுவாக நாட்டிக் கொள்ளமுடியும். றப்பர்,வாழை மற்றும் தென்னந் தோட்டங்களில் ஊடு பயிராக வல்லாரையை நாட்டிக்கொள்ள முடியும். வல்லாரைக்கான செய்கை நிலமானது ஈரலிப்பானதாகவும் நீர் தேங்கி நிற்காதவறும் இருக்க வேண்டும். நன்றாக உக்கிய சாணம,சேதன பசளை மற்றும் கோழி எச்சங்கள் ஆகிய வற்றைவல்லாரை செய்கைக்கு பயன்படுத்திக் கொலள்ளலாம்.
இலைகள் மஞ்சள்,கபில நிறபுள்ளிகள் மற்றும் நாவல் நிற நார்களுன் விகாரமாக காட்சியளித்தால அது வைரஸ் நோய் ஆகும். இலையில் நாவல் நிறதழும்புகள் ஏற்பட்ட பின்னர் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி இறந்து போகும் என்றால் அது இலை புள்ளிநோயாகும்.வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வில்லையாயின் விகாரமான செடிகளை பிடுங்கி அதனை சுட்டெரித்துப் போடுவது சிறந்ததாகும்.மற்றும் செய்கைக்கு சூரியஒளிபடும் படியாகவைக்க வேண்டும்.
பொன்னாங்காணி
வல்லாரை போன்றே பொன்னாங்காணியும் ஈரலிப்பான செய்கை நிலத்தில் செய்கை பண்ணப்படுகின்றது. பொன்னாங்காணி பல வகைகள் உள்ளன. இலைகளின் வடிவம்,காம்பின் நீளம் மற்றும் வர்ணத்தின் படி அவற்றின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளமுடியும்.பொன்னாங்காணி செய்கைக்கு கபில நிற புள்ளி நோய் அல்லது வெள்ளை துர்பிடித்தநோய் ஏற்படலாம். கபில நிறபுள்ளி நோயில் முதலில் இலைகளுக்கு கபில புள்ளிஏற்பட்டு பின்னர் பரவிச் செல்லும். அதனால் இலை உதிரும். வெள்ளை துர்பிடித்த நோய் காரணமாக இலைகளுக்கு கீழ்புறமாக வெள்ளை புள்ளி ஏற்படும். அந்த புள்ளிகளுடன் வெள்ளை நிற திரவம் ஒன்றுஏற்படும். அதனால் பொன்னாங்காணியின் வளர்சிக்கு தடை ஏற்படும். இதனை தடுக்க நோய் தாக்கத்திற்குள்ளான இலைகளை அப்புறப்படுத்துதல் மற்றும் பாத்தியில் நீர் தேங்கியிருந்தால் இதனை உடனடியாக அகற்றி சூரிய ஒளிபடும்படியாக வைக்க வேண்டும்
கங்குன் கீரை
நீர் பாய்சுவதன் மூலம் எந்தவொரு வீட்டுத் தோட்டத்திலும் கங்குன் செய்கை மேற்கொள்ளலாம். கங்குன் மிகவும் சுவையான மற்றும் குணமான மரக்கறியாகும். வெளியில் இருந்து பாய்சும் நீரை தேங்க வைத்தல் அல்லது வெளியில் பாயாதவாறு பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனைய மரக் கறி செய்கை போன்றே உக்கிய சாணம்,சேதனப் பசளைகள் போன்ற காபனிக் பொருட்களை மண்ணுடன் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறுஅமைக்கப்பட்ட பாத்திகளில் 6-8 இலைகள் உள்ளநீளமானகங்குன் கொடி துண்டுகளை நாட்டவேண்டும். சிறப்பாக வளர்ந்த 25 அடி நிலப்பரப்புடைய பாத்தியில் மாதம் ஒன்றுக்குபலதடவைகள் கங்குன் கொழுந்துகளை வெட்டிக்கொள்ள முடியும்.
சாரணை
வீட்டுத்தோட்டத்தில் செய்கை மேற்கொள்ளக் கூடிய இரண்டு சாரணை வகைகள் உள்ளன. தண்டு மற்றும் இலைகள் பச்சை நிறத்திலானது,மற்றும் இள கபில நிறமுடைய மற்றொன்றாகும். நன்றாக வளர்ந்த சாரணையின் விதை மற்றும் தண்டுகளைக் கொண்டு செய்கை மேற்கொள்ளமுடியும் சாரணை செய்கையில் பொன்னாங்காணி செய்கைக்கு அமைக்கப்பட்ட
விதத்திலேயே நிலத்தை தயார்படுத்தி கொள்ள வேண்டும். சாரணை செய்கைக்கு தேவையான அளவு நீர் பாய்சுவது சிறந்ததாகும். வெளியே உள்ள மண் உலர்ந்து விடாமல் பொதுவான ஈரலிப்புடன் வைத்துக் கொள்வதன் மூலம் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும். இளம் சாரணை கொழுந்து,இலை மற்றும் தண்டுஆகியன கூட்டாக சேர்த்துக் கொள்ள முடியும்.
பசளி
எந்தவொரு வீட்டுத்தோட்டத்திலும் செய்கை மேற்கொள்ள கூடிய கீரை வகையாகும். பசளிவகைபல உள்ளன. மரப் பசளி,பச்சை நிற இலைகளிலான கொடி பசளி மற்றும் சிகப்பு இலைகளிலான கொடி பசளிபெரும் பாலும் காணக்கூடிய பசளி வகைகளில் ஒன்றாகும். நன்றாக தண்ணீர் வடிந்து செல்லக்கூடிய உயர்ந்த இடத்தில் அமைக்கட்டபட்ட பாத்திகளில் பசளியை நாட்டுவது சிறந்ததாகும்.
ஏனைய கீரைவகை
போசாக்கு ரீதியாக உச்ச அளவைப் பெற்றுக் கொள்ளகூடிய இலை மரக்கறி வகைகள் உமது நாட்டில் உள்ளன. வீட்டுத் தோட்டத்தில் செய்கை மேற்கொள்ள கூடிய கீரை வகைகள் சில இவையாகும்.வல்லாரை பென்னாங்கானி தம்பலைபசளி , அகுணகேதகிரிஎந்த ,கங்குன் கீரை,அகத்திகீரை,சாரனை,கிரிஅகுண,கடுகுமிஞ்சி,நீரமுள்ளி,அவரை,பூசனி,முருங்கை,மரவள்ளி ஆகும்.
இவ்வாரான கீரை வகைகளை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு இயற்கை முறையான மரக்கரிகளை பெற்று பக்க விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் சிறந்த சத்துக்களை பெற்றுக்கொள்வதோடு நேயற்ற வாழ்க்கைகக்கான நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகளவாக பெற்றுக்கொள்ள முடியும்.