Thursday, November 21, 2024
Homeகல்விகட்டுரைகனவுகளின் நாயகன் அப்துல் கலாம்

கனவுகளின் நாயகன் அப்துல் கலாம்

- Advertisement -

kidhours.com

- Advertisement -

தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், பொருளாதார அறிஞர், இந்தியா குடியரசுத் தலைவர், நல்லாசிரியர் என பல பெருமைகளுக்குக் உரியவர் இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை என போற்றப்படும் அப்துல் கலாம் அவர்கள்.

அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரிரியாக கருதப்படுபவர் என்று கலாம் பற்றிச் சொல்வதில் யாருக்கு மாற்றுக் கருத்து இல்லை.1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

- Advertisement -

அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலுள்ள ஆரம்பப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். அவரது பள்ளிப்பருவத்தில் அவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

- Advertisement -

பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954 ஆம் ஆண்டில், இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், விண்வெளி பொறியியல் பட்டத்தை சென்னை எம்.ஐ.டி. யில் பெற்றார்.

விஞ்ஞானியான கலாம்
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) அறிவியலாளராக இணைந்தவர் அப்துல் கலாம். ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய இராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆய்வு கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப் பணியை தொடர்ந்தார். துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட் பயன்படுத்தி ரோகினி- I என்ற துணைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்ததில் கலாமின் பங்கு முதன்மையானது. இதற்காக மத்திய அரசு கலாமுக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.
1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்து வந்தார். 1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஐந்து ஏவுகணை திட்டங்களில் இன்றியமையாத பங்காற்றியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார். குடியரசு தலைவர் பதவியில் அமரும் முன்பே இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு அளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கலாம் ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து காலமானார் ஏவுகனை நாயகர் அப்துல் கலாம்.

விருதுகள்:
• 1981; பத்ம பூஷன்

• 1990; பத்ம விபூஷன்

• 1997; பாரத ரத்னா

• 1997; தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

• 1998; வீர் சவர்கார் விருது

• 2000; ராமானுஜன் விருது

• 2007; அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

• 2007; கிங் சார்லஸ்-II பட்டம்

• 2008; பொறியியல் டாக்டர் பட்டம்

• 2009; சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

• 2009; ஹூவர் மெடல்

• 2010; பொறியியல் டாக்டர் பட்டம்

• 2012; சட்டங்களின் டாக்டர்

• 2012; சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய முக்கிய நூல்கள்:
• அக்னி சிறகுகள் (சுய சரிதை)
• இந்தியா 2020, எழுச்சி தீபங்கள்
• அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.