Kabul Bomb blast 53 Died சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் தங்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படுவகாக கூறி,
அதற்கு எகிராக பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி நாடு ஒருபுறம் போராட்ட களமாக இருக்க, மறுபுறம் மசூதிகள், தூதரகங்கள், பஸ் நிலையங்கள் என பொது இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்வதும் இங்கு சர்வசாதாரண நிகழ்வாகி வருகிறது.
தலைநகர் காபூலில் உள்ள பிரபல கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை மொத்தம் 53 பேர் பலியாகி உள்ளதாகவும்,
அவர்களில் 46 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று்ம், 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் ஆப்கனுக்கான ஐ.நா. குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்தபோது, கல்வி மையத்தின் வெளியே பெண்களும், சிறுபான்மை சமூகத்தினரும் அரசுக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தி உள்ளனர்.
அப்போதுதான் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
Kidhours _ News – Kabul Bomb blast 53 Died
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.