Wednesday, January 22, 2025
Homeகல்விஅனர்த்தங்கள்காட்டுத் தீ அனர்த்த முகாமைத்துவம்

காட்டுத் தீ அனர்த்த முகாமைத்துவம்

- Advertisement -

காடுகளில் பொதுவாக பேரழிவு ஏற்படுத்தும் பிரச்சனை காட்டுத் தீயாகும். காட்டுத் தீ என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் காட்டு வளத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவது மட்டுல்லாமல், விலங்குகள், தாவரங்களை அதிகளவில் அளிப்பதால், சுற்றுப்புற சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. கோடைக் காலங்களில், பல மாதங்களுக்கு மழை இல்லாத போது, காடுகள் முழுவதும் காய்ந்த இலைகள், பற்றி எரிந்து விடும். கோடைகாலத்தின் கடைசி சில மாதங்களில், இமாலய காடுகளில், குறிப்பாக கார்வால் இமாலயப் பகுதிகளில் காட்டுத் தீ எப்பொழுதும் ஏற்படுகிறது.
காட்டுத் தீயினால் இயற்கையில் சமமற்ற நிலையும், தாவரங்கள் அழிந்து விடுவதால் பலவித பயிர்களுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. பராம்பரிய முறைகள் மூலம் காட்டுத் தீயை தடுப்பது பயனற்றதாக உள்ளது. இதற்காக பொது மக்களிடம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

- Advertisement -

kattu thee-kidhours

காட்டுத்தீயின் விளைவுகள்

- Advertisement -

காட்டுத் தீ இயற்கையாகவும், மனிதனாலும் ஏற்படுகிறது.

- Advertisement -

இயற்கை விளைவுகள்

மின்னலினால் காட்டிற்குள் இயற்கையாகவே பல காட்டுத் தீ ஏற்படுகிறது. இருந்தாலும், மழை பொழிந்தால், பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட சூழ்நிலையும் நிலவும் போது தீ ஏற்படுகிறது.

மனிதனால் ஏற்படும் விளைவுகள்

திறந்த வெளியில் தீபற்ற வைத்தல், சிகரெட் (அ) பீடி, தீபற்ற வைக்கும் பெட்டி ஏதாவது ஒன்று காட்டில் உள்ள காய்ந்த இலைகளின் மீது படும் போது தீ ஏற்படுகிறது.
பாரம்பரியமாக, இந்தியக் காடுகள் தீயினால் பாதிக்கப்படுகின்றன. காட்டுத் தீ ஏற்படுவது 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. சுற்றுப்புற சூழல் மற்றும் மனிதன் சார்ந்த (கட்டுப்படுத்தக் கூடியவை) (கட்டுப்படுத்த முடியாதது)

சுற்றுப்புற சூழலினால் ஏற்படும் விளைவுகள்

வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, மண் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மற்றும் வறட்சி நிலவும் காலத்தைப் பொறுத்து காட்டுத் தீ ஏற்படுகிறது. அதிக காற்றின் வேகத்தினால் மூங்கில் மரங்கள் உராய்ந்து மற்றும் கற்கள் ஒன்றோடொன்று உருண்டு தீயை ஏற்படுத்துகின்றன.

மனிதன் சார்ந்து ஏற்படும் விளைவுகள்

1.மனிதனுடைய நடவடிக்கைளால் காட்டுத் தீ ஏற்படுகிறது
2.காட்டுப் பொருட்களிலும், புற்களிலிருந்தும், தீ ஏற்படுகிறது.
3.இடமாற்றச் சாகுபடியினால் (வடகிழக்குப்பகுதிகள் மற்றும், ஒரிசா ஆந்திரப் பிரதேசத்தின் உள்பகுதிகள்) தீ ஏற்படுகிறது.
4.வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க கிராமத்தினரால் தீ வைக்கப்படுதல்.
5.சுற்றுலாப் பயணிகள் எரிந்த சிகரெட் துண்டுகளை வீசி எறியும் போது தீ விபத்து ஏற்படுகிறது.

காட்டுத்தீயின் வகைப்பாடு

காட்டுத் தீயானது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.இயற்கை

2.கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ
3.கோடைக் காலங்களில் மக்களின் அலட்சியத்தினால் ஏற்படுத்தப்படும். உள்ளுர்வாசிகள் வேண்டுமென்றே தீ வைத்தல்.
காட்டுத்தீயின் வகை

kattu thee-kidhours
kattu thee-kidhours

இரண்டு வகைகள் உள்ளன.

(1) மேற்பரப்பு தீ

(2) உச்சியில் ஏற்படும் தீ

மேற்பரப்புத் தீ

காட்டுத் தீயானது பொதுவாக மேற்பரப்பில் பரவியிருக்கும் காய்ந்த குப்பபைகள், கிளைகள், புற்கள் போன்றவைகளால் ஏற்படுகிறது.

உச்சியில் ஏற்படும் தீ

ஊசியிலைக் காடுகளில் பிசின் பொருட்கள் மரத்திலிருந்து கட்டைகள் மீது விழும் போது தீப்பிடித்துக் கொள்கிறது. மலைச் சரிவுகளில், மலையின் அடிவாரங்களில் தீ ஆரம்பித்தால், அது விரைவாகப் பரவி அருகில் உள்ள சரிவிற்கும் பரவி தீ ஏற்படுகிறது. தீ மலையின் மேலிருந்து தோன்றினால், கீழ்நோக்கி பரவும்.

காட்டுத்தீயினால் ஏற்படும் விளைவுகள்

1.மதிப்புள்ள மரங்கள் மடிந்து விடும்.
2.நீர்பிடிப்பு பகுதிகள் அழிந்து விடும்.
4.பலவித தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உயிரிழப்பு
5.வனவிலங்கு வாழ்விடம் மற்றும் வனவிலங்கு அழிந்துவிடுதல்
6.காட்டுப் பகுதி அழிந்துவிடுதல்
7.பூமி வெப்பமடைதல்
8.காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்.
9.வானிலை மாற்றத்தினால் வாழ்வதற்கு தகுதியற்ற சூழ்நிலை உருவாகும்.
10.மண் அரிப்பு ஏற்படுகிறது.
11.ஒசோன் அடுக்கில் துவாரம் ஏற்பட்டு, கசிவு ஏற்படுதல்.
12.மனிதனுக்கு நோயை ஏற்படுத்துகிறது.
13.மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

kattu thee-kidhours
kattu thee-kidhours

தீ முகாமைத்துவத்தின்  முக்கியத்துவம்

1.கல்வி மற்றும் சுற்றுப்புற சூழல் மாறுபாட்டின் மூலம் மனிதனால் ஏற்படும் தீயை தடுக்கலாம்.
2.தொலைவுணர்வு தொழில்நுட்பம் மூலம் தீ ஏற்படுவதைக் கண்காணிக்கலாம். 3.தேசிய தீ அபாய அலறும் அமைப்பு மற்றும் தீ முன்னறவிப்பு மையத்தின் மூலம் தீ ஏற்படுவதை தடுக்கலாம்.
4.உடனடி தடுப்பு நடவடிக்கை எடுத்தல்

reference-

1.https://ta.wikipedia.org

2.agritech-TN

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.